அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசநகரிப்பட்டினம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது . அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் , இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளிமேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது . பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி , பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஒருமுறை ஆண்டுகளுக்கு மறுகட்டமைப்பு செய்வது அவசியம் . அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை செய்வதற்குத் மறுகட்டமைப்பு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா பொண்ணமங்கலம்  ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் பள்ளி மேலாண்மைக் குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்  

1.நடுநிலை பள்ளியாக இருக்கும் நம் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக 2023 குள் மாற்ற வேண்டும் என்று தீர்மானம்  நமது ஊர் பெண்கள் மற்றும் ஆண்கள் வெளி ஊர்களில் போய் வாகனங்களில் சென்று படிப்பதால் சிரமத்திற்கு ஆளாக உள்ளதால் அவர்களுக்கு உயர்நிலைக் கல்வி நமது ஊரிலே வருவதற்கு முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது முதல் தீர்மானம்.
2. நமது ஊர் பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. தற்போது 2022ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை மொத்தம் I   - 37 , II  - 19 ,III - 28 ,IV - 21 ,V - 25 ,VI - 19 ,VII - 20 ,VIII - 11
மொத்தம் =180 

இதன் காரணமாக மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் நாம் வீடுதோறும் அனைவரும் ஊக்குவிக்கும் விதமாக தன் பிள்ளைகளை முன்வந்து சேர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானம் ஏற்றப்பட்டது
3. தற்போது 180 மாணவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு படித்து கொடுக்கும்  ஆசிரியர்கள் நான்கு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது.  ஆசிரியர்கள் அதிகரித்து தருமாறு கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆசிரியர்கள் , ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் , ஊராட்சி பிரதிநிதிகள் , மற்றும் பெற்றோர்கள் , பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள் .

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சோ.இராமசாமி த.ஆ அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார் . பிறகு ஜமாஅத்  நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் நம் பள்ளி நம் பெருமை பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார்கள் . இறுதியில் ஒய்.ஆர்.பாக்கியசுதர், ஆசிரியர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments