கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு!


கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் இளைஞர்களால் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை என்கிற தன்னார்வ அறக்கட்டளை இயங்கி வருகிறது. 

மீமிசல் பகுதியில் சமூக சேவைகளில் சிறப்பாக  ஈடுபட்டு வரும் அறக்கட்டளைகளில் இந்த அறக்கட்டளையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டிணத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை இடிந்து விழும் சூழ்நிலையில் இருப்பதாக தெரியவந்தது. எனவே இதன் தன்மை குறித்து என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக சகோ.அபுதாஹீர் சகோ.ஆசிக் மற்றும் பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடக்கவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடமும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்களிடத்தில் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மனுவின் மீது உனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்தார்.

மேலும் மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடத்தில் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பேசியதாகவும், எங்களை அழைத்து தகவல் கூறியுள்ளனர். எங்கள் மனுவின் மீது நேரம் தாழ்த்தாது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்:
என்றும் உதவும் கரங்கள் 
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை 
கோபாலப்பட்டிணம்
மீமிசல் 614621
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments