கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸாவின் பரிசளிப்பு விழாகோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸாவின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் 30/03/2022 புதன்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசலில்  ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸாவின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பெரிய பள்ளிவாசல் மாடியில் சிறப்பான முறையில் இயங்கி வரும் ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு  மதரஸாவில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் பிற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும்  ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊர் ஜமாத்தார்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸாவில் 2022-2023 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதி: குர்ஆனை சரளமாக பார்த்து ஓத தெரிந்திருந்தால் போதுமானது.

தொடர்புக்கு: 7539945610, 6374093865

தகவல்
மெளலவி அல்ஹாஃபிழ். ரியாழ் முஹம்மது அல்குத்ஸி,

ஆசிரியர், ரஹ்மானிய்யா ஆண்கள் ஹிஃப்ளு மதரஸா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments