கல்லூரி கட்டணம் செலுத்த சிரமப்படும் மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து உதவி வரும் கீழக்கரை கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு


படிப்பில் முதன்மை.. விளையாட்டில் முதன்மை ...சமூக சேவையிலும் முதன்மை ...சாதிக்கும் கீழக்கரை மாணவி

ஒரு வருடத்தில் ரூபாய் 3,75,000/- நல்லுள்ளங்கள் மூலம் திரட்டி ஆதரவற்ற மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணம் செலுத்தியுள்ளார் 

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் பயிலும் மாணவி பாத்திமா நவ்ரா இவர் சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தாசிம் பீவி கல்லூரியில் பயிலும் மாணவி  FATHIMA NOWRA குண்டெரிதல் (shotput)  போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்று (1st Place) தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளார்  அதோடு தொடர்ந்து சமூக சேவையில்  முழுமையாக ஈடுபட்டு , VTeam என்ற குழுவைத் தொடக்கி ,ஒரே வருடத்தில்  ரூபாய் 3,75,000/- வசூல் செய்து ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்துள்ளார். 

இவரின் பணிகளை பாராட்டி BEST WOMEN SOCIAL ACTIVATOR OF 2022  என்ற விருதையும் பெற்று தன் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துளார். இவர் கீழக்கரை கவுன்சிலர் எம் எம் கே காசிம் அவர்களின் மகளாவார்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments