காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் ரெயில்வே பொது மேலாளருக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை .






காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று ரெயில்வே பொது மேலாளருக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோரிக்கை மனு 

தஞ்சை மாவட்ட நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல சங்க மாவட்ட தலைவர் பகாத்முகமது, மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் ஆகியோர் சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். 

அதில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம். நாங்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தால் எங்களுக்கு ரெயில் பயணம் தான் உகந்ததாகும். பட்டுக்கோட்டை 100 ஆண்டுகள் பழமையான ரெயில் வழித்தடமாகும்.

சென்னைக்கு விரைவு ரெயில் 

இந்த வழித்தடத்தில் தான் கம்பன் மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரெயில்கள் சென்று வந்தன. இந்த ரெயில்கள் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டது. தற்போது அகல பாதை அமைக்கும் பணி முடிந்து காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் மயிலாடுதுறை வரை ரெயில் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரெயில் சேவை இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே இந்த வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments