மூன்று இலட்சம் கடனுக்காக ஐம்பதாயிரம் இழந்த இளைஞரின் பணத்தை மீட்டு இளைஞரிடம் ஒப்படைத்த இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர்.






மூன்று லட்சம் கடனுக்காக ஐம்பதாயிரம் இழந்த இளைஞரின் பணம் மீட்பு.

இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்ற நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். பிரபல நிதி நிறுவனத்தின் ஊழியர் என்ற பெயரில் போன் மூலம் திருப்பதியை தொடர்பு கொண்ட நபர் மூன்று இலட்சம் கடன் தருவதாகவும், அதற்கு ரூபாய் 50000-ற்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி 50000 பணத்தைச் செலுத்திய திருப்பதி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்று மனு ரசீது பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு ஏமாற்றிய நபரிடமிருந்து பணத்தை மீட்டு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.A.அருண் அவர்கள் முன்னிலையில் திருப்பதியிடம் வழங்கினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments