தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு கிடையாது - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு







தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கிடையாது என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு இல்லை என்று பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகள் கிடையாது. 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 30 ஆம் தேதி வெளியிடப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும். 2022-23ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24ஆம் தேதி துவங்குகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13ஆம் தேதி துவங்கும் என்றும் அதில் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments