கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக ரமலான் நோன்பு கால பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி!!!!






கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக ரமலான் நோன்பு கால பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!

அன்பார்ந்த கோபாலப்பட்டிணத்தின் சகோதரிகளே, தாய்மார்களே நாம் அனைவரும் மேன்மை பொருந்திய ரமலான் மாதத்தை அடைந்திருக்கிறோம். இந்த மாதத்தில் அதிகமான திக்ருகளை செய்தும், அனைத்தையும் படைத்த இறைவனால் உலக மக்களுக்காக புனிதமிக்க இந்த ரமலான் மாதத்தில் இறக்கி அருளப்பட்ட திருகுர்ஆனை வாசித்தும் அதன்படி ரமலான் காலங்களிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் நம்முடைய வாழ்க்கையை அமைத்து இறைவனுக்கு நெருக்கமான முஃமீன்களாக நாம் இவ்வுலகை வாழ்வை முடிக்க வேண்டும்.

எனவே இந்த ரமலான் மாதத்தில் அனைவருக்கும் குர்ஆனை வாசிக்க வேண்டும் குர்ஆனோடு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்  இந்த ரமலான் மாதத்தில் இறைவன் நாடினால் பெண்களுக்கான
இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம். கேள்விகள் அனைத்தும் குர்ஆனிலிருந்து மட்டுமே கேட்கப்படும்.

பரிசுகள்

முதல் பரிசு வாசிங் மெஷின் மற்றும் 15 கிராம் வெள்ளி நாணயம்

இரண்டாம் பரிசு ரூ5000 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 10 கிராம் வெள்ளி நாணயம்

மூன்றாம் பரிசாக ரூ3000 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 8 கிராம்  வெள்ளி நாணயம் கொடுக்கப்படும்.

ஆறுதல் பரிசு சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பு:

பெருநாள் தொழுகைக்கு பிறகு அனைத்து கோபாலப்பட்டிணத்தின் மக்களுக்கு முன்னிலையில் வெற்றி பெற்றவர்களை சிறப்பிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்படும்.

கேள்விகள் 5-ஆம் நோன்பு இஃப்தார்க்கு பிறகு வாட்ஸ்அப் குழுவின் மூலமாகவும், GPM Media மூலமாகவும், முகநூல் மூலமாகவும் அனைவருக்கும் அனுப்பப்படும்.

பதில்களை 25-ஆம் நோன்பு அன்று  இஷா தொழுகைக்கு முன்பு பெண்களுக்கு இரவு தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்கள், மதரசாக்களில் வைக்கப்படும் பதில் பெட்டிகளில் பதில் தாள்களை போட வேண்டும்.

(போட்டி குறித்தான எந்த ஒரு முடிவும் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் முடிவுகளுக்கு மட்டுமே உட்பட்டதாகும்.)

இன்ஷா அல்லாஹ் தயாராக இருங்கள்!

இன்றே குர்ஆனை திறந்து இறைவசனங்களை உற்று நோக்குங்கள்! 

அதை மனதில் நிலைநிறுத்தி தங்களது அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்துங்கள்!

அல்லாஹ் அனைவரையும் பொறுந்திக்கொள்வானாக!
சலாம்...

இப்படிக்கு...,

என்றும் உதவும் கரங்கள்,
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

மேலும் தொடர்புக்கு: 97894 76612 , 97879 56584, 81241 50046

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments