தமிழகத்தில் ஏப்ரல் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு






தமிழகத்தில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15 ஆம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், 16 ஆம் தேதியும்(சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து வகுப்புகளுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக செய்து வருகிறது.

வரும் 14 ஆம் தேதி வியாழன் கிழமை தமிழ்ப் புத்தாண்டு வருகிறது, அன்று அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து, வரும் 15 ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை. இதற்கிடையே 16 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை விடப்படமா என்ற சந்தேகத்தில் மாணவர்கள் இருந்தனர்.

இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதைத் தொடர்ந்து 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பள்ளிகளுக்கு விடுமுறை. இதன் மூலம் வரும் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 18 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறையால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த தகவலை பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments