காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு அனைத்து மக்களின் முயற்சியால் பரங்கிப்பேட்டையில் நெகிழ்ச்சி

காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு அனைத்து மக்களின் முயற்சியால் பரங்கிப்பேட்டையில் நெகிழ்ச்சியை சம்பவம் நடந்து உள்ளது
 
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10 ஆம் தேதி  ஞாயிறுக்கிழமை 8ஆம் வகுப்பு  படிக்கும் 13 வயது மாணவி கதிஜா காணாமல் போன தகவல் புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. 
உடனே அனைவரும் தங்கள் வீட்டு பெண்ணாக கருதி அந்த பெண்ணுக்காக பிராத்தனை செய்தனர். தங்களிடம் இருக்கும் அணைத்து CCTV கேமரா பதிவுகளில் அந்த பெண் இருக்கிறாரா  என்று தேடியதில், அந்த பெண்ணின் நடமாட்டம்  கடலூர் பகுதியில் இருப்பதும், பின்பு பாண்டிச்சேரி பகுதியில் இருப்பதும், கோட்டக்குப்பம் பகுதியில் இருப்பதும் ஏன பல CCTV கேமராகளில்  அந்த பெண்ணின் இருப்பை காட்டியது. 

கடைசியாக அந்த பெண் இன்று பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த பெண்ணை இவ்வளவு துரிதமாக கண்டுபிடிக்க பெரிதும் உதவியது CCTV கேமரா மற்றும் அணைத்து சமூக ஊடகங்கள், இளைஞர்களே.

பொதுமக்கள் அதிக புழங்கும் இடங்களில் புதிய CCTV கேமரா வைக்கவும், செயல்படாமல் இருக்கும் கேமராவை இயங்க வைக்கவும் அனைவரும் உறுதியேற்போம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments