கோபாலப்பட்டிணத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி விநியோகம் & பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு


கோபாலப்பட்டிணம் பெரியபள்ளிவாசலில் நோன்பு கஞ்சி விநியோகம் & பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு

இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதத்தில் பிறை தென்பட்ட நாளிலிருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். மாத இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 3) அதிகாலை தொடங்கியது. மாதம் முழுவதும் அதிகாலை பஜர் தொழுகையில் இருந்து மாலை 6.30 மணி வரை இஸ்லாமியா்கள் உண்ணாமலும், நீா் பருகாமலும் நோன்பு இருப்பா். இரவில் சிறப்புத் தொழுகையிலும் ஈடுபடுவா்.பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.

நோன்பு கஞ்சி
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதற்காக வேண்டி பெரிய பள்ளிவாசலில் & தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம்.

இதனை ஊர் மக்கள் வாங்கி பயன் பெறுகின்றனர். மேலும் மக்கள் வரிசையாக நின்று வாங்கி செல்கின்றனர். அதே போல் பள்ளிவாசலில் இப்தார் திறப்பதற்காக நோன்பு கஞ்சி ஊரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

கோபாலப்பட்டிணத்தில் நோன்பு கஞ்சி ஸ்பெஷலாக இருக்கும்.‌ இதை விரும்பி சாப்பிடுவார்கள் அதிகம். நோன்பு கஞ்சி  வெள்ளை கலரில் இருக்கும்.

இப்தார்கோபாலப்பட்டிணத்தில் இப்தார் வீட்டிலும் மற்றும் பள்ளிகளில் நடைபெறும்.  

பள்ளிகளில் நோன்பு கஞ்சி, வடை, பேரித்தம்பழம், தண்ணிர் , சர்பத் போன்றவைகள் வழங்கப்படுகிறது.

இப்தார் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த பள்ளியிலும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடை பெறவில்லை. அனைவரும் வீட்டிலேயே நோன்பு திறந்தனர். 2021-ஆம் ஆண்டு இரண்டாம் கொரனோ அலை காரணமாக சில நாட்கள் மட்டும் இப்தார் பள்ளியில் நடைபெற்றது ‌.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments