புதுக்கோட்டையில் (ஏப்ரல் 09)மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

நாள்: 09-04-2022 சனிக்கிழமை 
காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

இடம்: ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கைக்குறிச்சி.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.


சிறப்பு அம்சங்கள் 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

2500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்ய உள்ளனர். 

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு.

தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது.

கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எஸ்.சி/+2/ ஐ.டி.ஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பு / 9.5 / எம்.பி.ஏ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில்
கலந்து கொண்டு பயன்பெறலாம். (வயது: 18 வயது முதல் 40 வயது வரை)

அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன் பெறுவோம்.

அனுமதி இலவசம்.

மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு,
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்
தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், புதுக்கோட்டை 
போன் : 04322 - 230950 / 9444094494, 462, 463, 464, 485, 467

இளைஞர்களே உங்களைப்பற்றிய தகவல்களை...

இன்றே பதிவு செய்யுங்கள் கைபேசி செயலி
(Android APP) Kaushal Panjee

இணைய தள முகவரி www.Kaushalpanjee.nic.in


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments