புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 11) உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 11) உள்ளூர் விடுமுறை

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டைத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.  புதுக்கோட்டை ,கீரனூர், குளத்தூர் ,அன்னவாசல் ,இலுப்பூர் ,நார்த்தாமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் இவ்விழாவிற்கு வந்து தேரோட்டத்தில் கலந்துகொள்வார்கள். இந்நிலையில், இந்தாண்டுக்கான திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற 11ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது.தேரோட்டத்திற்கு புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதன் காரணமாக தேரோட்டம் நடைபெறும் நாளான வருகிற 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.  நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று தொடங்கி இருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதியன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான மாற்று பணி நாளாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வேலை நாளாகவும்  வழக்கமாக வேலை நாளாக கொண்டுள்ள அரசு அலுவலர்களுக்கு அடுத்த நாள் ஏப்ரல் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் ஆகும் என ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments