மீமிசலில் 5 செ‌.மீ மழை பதிவு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் கனமழை பொழியும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடற்பகுதி, தென்மேற்கு குமரிக்கடல், வங்கக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):!

கொடைக்கானல் (திண்டுக்கல்) 7, சாத்தூர் (விருதுநகர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), நெய்வேலி (கடலூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மீமிசல் (புதுக்கோட்டை), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 5, பெரியாறு (தேனி), கயத்தாறு (தூத்துக்குடி), குறிஞ்சிப்பாடி (கடலூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), போடிநாயக்கனூர் (தேனி), புவனகிரி (கடலூர்), தலா 4, பாளையங்கோட்டை (திருநெல்வேலி), கயத்தாறு (தூத்துக்குடி), கடம்பூர் (தூத்துக்குடி), தேக்கடி (தேனி), எருமப்பட்டி (நாமக்கல்), எமரால்டு (நீலகிரி), கோவிலங்குளம் (விருதுநகர்), மானாமதுரை (சிவகங்கை), புலிப்பட்டி (மதுரை), வால்பாறை (கோவை), அவலாஞ்சி (நீலகிரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி) தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments