கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மீண்டும் வெளுத்து வாங்கும் கோடை மழை





புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக - வடஇலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா   மீமிசல்  கோபாலப்பட்டிணத்தில் காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோ‌ஷண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மதியம் 1.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டித் தீர்த்தது வருகிறது இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக பொதுமக்கள் அடைந்துள்ளனர்.  வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments