தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அரிமளம் அருகே ஒத்தபுளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. காலையில் மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் படித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments