அறந்தாங்கி வழியாக விரைவு ரயில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் காமராஜ். தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:

மயிலாடுதுறை முதல் திருவாரூர், திருத்துறைப் பூண்டி. முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந் தாங்கி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
இப்போது இந்த வழித்தடத்தில் ஒரு ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. ரயில்வே நிர்வாகம் பொருத்த மற்ற காரணங்களை கூறி விரைவு ரயில் இயக்க தாமதப்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக வர்த்தக சங்கம், ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் எம்பிக்களு டன் இணைந்து டில்லி யில் ரயில்வே வாரிய தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் உறுதியளித் தார்

ஆனால், ஓராண்டு ஆகியும் விரைவு ரயில் இயக்கப்படவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள், ஒரு கோடிக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய விரைவு ரயில் போக்கு வரத்தை உடனடியாக தொடங்க வணிகர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி ரயில்வே வாரியத்திட மும், மத்திய அரசிட மும் வலியுறுத்த வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments