சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் வெயில் மே 4ந்தேதி தொடங்குகிறது…



கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் nம 4ந்தேதி தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த அக்னி நட்சத்திரம் வெயில் 25 நாட்கள் சுட்டெரிக்கும் என்றும், பொதுமக்கள் பகல்நேரத்தில் வெளியே நடமாடுவதை தவிருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், இப்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் வேலூர் மாவட்டம் உள்பட  சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது. வேலூரில் அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில்  103.2 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. அதேபோல் திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் வெயில் ஏற்கனவே 100 டிகிரியை தாண்டிவிட்டது.

இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் வெயில் காலம்  மே 4-ந்தேதி தொடங்கு மே 28-ந் தேதி முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்த காலக்கட்டத்தின்போது அனல்காற்று விசும் என்பதால் பகலில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், குளிர்ந்த நீராகாரங்கள் பருகி வெப்பத்தை தணித்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments