புதுக்கோட்டை மாவட்டத்தில்பொதுத்தேர்வுகளை 62 ஆயிரத்து 647 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர் கலெக்டர் கவிதாராமு தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளை 62 ஆயிரத்து 647 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் (மே) நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்களும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 30 தேர்வு மையங்களும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்களும் என 91 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 21 ஆயிரத்து 17 மாணவ, மாணவிகளும், பிளஸ்-2 தேர்வினை 19 ஆயிரத்து 332 மாணவ, மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 23 ஆயிரத்து 298 மாணவ, மாணவிகளும் எழுத உள்ளனர்.

அரசு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்தும் வகையில் தேர்வு மையங்கள், வினாத்தாள் மையங்கள், விடைத்தாள் மையங்கள் போன்ற இடங்களில் போதுமான காவலர்களை பணியில் அமர்த்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தோ்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சிறப்பு பஸ்கள்

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் பணி மேற்கொள்ள வேண்டும். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். மேலும், தேர்வுகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படையினர், கண்காணிப்பு அலுவலா்களை கொண்டு தேர்வு மையங்களில் சோதனை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வினை மாணவ, மாணவிகள் சிறப்பாக எழுதும் வகையில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளை 62 ஆயிரத்து 647 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments