கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்! புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!கோபாலப்பட்டிணத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரேஷன் கடை கட்டிடம் ‌புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமத்தில் ரேஷன்கடை கட்டிடம் உள்ளது. இந்த ரேஷன் கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மீமிசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த பழைய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. 24 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் மேற்கூரை காரை பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. நான்கு சுவர் பகுதிகளிலும் வெடிப்பு விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.  இதனால் மழை பெய்யும் போது கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பகுதியில் தண்ணீர் கசிந்து உள்ளே இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன் தவற சீட்டு போட்டு மூடப்பட்டுள்ளது.  புதிய கட்டிடம் கட்ட வேண்டும் இருந்தும் இந்த ரேஷன் கடை கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆகவே அச்சத்துடனே இந்த கடையில் அந்த பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வரும் இந்த ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை போர்க்காள அடிப்படையில் புதிய கட்டிடம் கட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுமக்கள் சார்பாகவும், GPM மீடியா சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments