கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், கீழமஞ்சக்குடி, வெட்டிவயல், மின்னாமொழி, இடையாத்திமங்கலம், காரக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கதிஜா அம்மாள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாலசுந்தரம் கலந்து கொண்டார். கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி 2021-2022 திட்டத்தின் கீழ் கிராம வளர்ச்சி பணிகள் தொடர்பாக தேர்வு செய்யப்பட்ட பணிகள் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) கணேசன் வரவேற்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments