அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்வு
தமிழக சட்டசபையில் நேற்று மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-“புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின்” கீழ் ரூ.1,018.85 கோடி மதிப்பீட்டில் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூர், திருத்தணி, வள்ளியூர், திருப்பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம்-காரையூர் மற்றும் புதுநகர், சிவகங்கை மாவட்டம்-பூவந்தி, விருதுநகர் மாவட்டம்-தாயில்பட்டி மற்றும் ஜமீன் கொல்லன்கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம்-மங்களம், தூத்துக்குடி மாவட்டம்-புதுக்கோட்டை மற்றும் தென்காசி மாவட்டம்-செங்கோட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ரத்த சேமிப்பு அலகு நிறுவப்படும்.அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், மதுரை, திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பள்ளி சுகாதார தூதுவர்களாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள், ரூ.6.47 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments