புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்




புதுக்கோட்டை நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் லியாகத் அலி, கமிஷனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது காந்திநகர் பகுதியில் 4 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இதில் எதுவும் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து உள்ளது. மேலும் காந்திநகர் 5-ம் வீதியில் 8 ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. மேலும் இந்த கட்டிடம் தனிப்பட்ட நபரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை மீட்டு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து, நகர்மன்ற தலைவர் திலகவதி கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக கழிப்பிடம் திறக்கப்படவில்லை என்றால் கடந்த கால ஆட்சியில் ஏன் இதுகுறித்து கேட்கவில்லை. இருப்பினும் இதை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைதொட்ந்து கவுன்சிலர்கள் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்சினை அதிகம் உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. இந்த குறையை தீர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். திருவப்பூர் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தாமல் உள்ளது. மேலும் பல இடங்களில் வால்வு உடைந்து பழுதாகியுள்ளது. டாக்சி ஸ்டாண்டு உள்ள கார்களுக்கு நகராட்சி மூலம் ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் மற்றும் சைக்கிள் ஸ்டாண்டு ஆகியவற்றில் ரூ.65 லட்சம் பாக்கி உள்ளது. இந்த பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது டெண்டரை மாற்ற வேண்டும். நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி உள்ளது. இதை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சில கடைகள் உள்வாடகைக்கு விடப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments