கோபாலப்பட்டிணத்தில் இடி, மின்னல் தாக்கியதில் மின்தடை - சரி செய்து வருவதாக கொடிக்குளம் உதவி பொறியாளர் தகவல்


கோபாலப்பட்டிணத்தில் இடி, மின்னல் தாக்கியதில் மின்மாற்றி பழுதானதால் மின்சாரம் விட்டு விட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று இரவு மின்னல் தாக்கியதில் காட்டுக்குளம் பள்ளிவாசல் மினாரா சேதமடைந்தது. மேலும் அருகில் இருந்த வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசலில் உள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து GPM மீடியா சார்பாக கொடிக்குளம் AE அவர்களிடம் கேட்டபோது

நேற்று இடி, மின்னல் தாக்கியதில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் மூன்று டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தது. ஆகவே கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் விநியோகம் சீராக கிடைக்க ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று இரவு அல்லது நாளை காலை சீராக மின்சாரம் கிடைக்கும் என தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments