கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்


கோபாலப்பட்டிணத்தில் மின்னல் தாக்கியதில் காட்டுக்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோபாலப்பட்டிணத்தில் நேற்று இரவு மின்னல் தாக்கியதில் காட்டுக்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் பேன், இன்வெர்ட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது. 

இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments