மீமிசல் - தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இளைஞா் பலி






ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
 
மீமீசலைச் சோ்ந்த வேலு மகன் சித்திரவேல் (19). பால் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். அதே ஊரைச் சோ்ந்த ரபீக் உசேன் மகன் ரகுமான் (18). பிளஸ் 1 மாணவா். இருவரும் மீமிசலில் இருந்து தொண்டிப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். வாகனத்தை சித்திரவேல் ஓட்டியுள்ளாா். அவா்கள் வட்டாணம் பகுதியில் சாலை சந்திப்பில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த சித்திரவேல், ரகுமான் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட நிலையில் சித்திரவேல் உயிரிழந்தாா். ரகுமானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments