காரங்காடு சூழல் மையத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு ; சுற்றுலா பயணிகள் சதுப்பு நிலக்காட்டை ரசிக்க லாம்






காரங்காடு சூழல் மையத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு ; சுற்றுலா பயணிகள் சதுப்பு நிலக்காட்டை ரசிக்கலாம்

ராமநாதபுரம், : தொண்டி அருகேயுள்ள காரங்காடு சதுப்புநிலக் காடுகளின் சொர்க்க பூமியாக உள்ளது. இங்கு துடுப்பு படகுகளுடன் புதிதாக பயணிகள் குடும்பத்துடன் கடற்பகுதியை ரசிக்கும் வகையில் 10 பெடல் படகுகள் வாங்கப்பட்டுள்ளது. புதிதாக ஜெட்டி (கடற்கரை பகுதி நடை பாலம்) அமைக்கும் பணி நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்புநில அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன.


இப்பகுதியில் கடல்பசு, கடல்குதிரை, கடல்பாசி உள்ளிட்ட கடல்சார் வன உயிரினங்கள் வாழ்கின்றன. ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பகம் சார்பில், காரங்காடு சுற்றுசூழல் மையம் உள்ளது. இங்குள்ள சதுப்புநிலக்காட்டின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் 3 கி.மீ. தூரம் படகு சவாரி கயாக்கின் எனப்படும் துடுப்பு படகு சவாரியும், ஸ்நார்கிங் எனப்படும் தண்ணீருக்கு அடியிலுள்ள உயிரினங்களை கண்டுகளிப்பது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

வெளிமாவட்டம் மட்டுமின்றி மாநிலங்களிலிருந்தும் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனையடுத்து மன்னார் வளைகுடா வனஉயிரின பாதுகாவலர் பகான் ஜக்தீஸ் சுதாகர், ராமநாதபுரம் ரேஞ்சர் ஜெபஸ் மேற்பார்வையில், சுற்றுசூழல் மையத்தை மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதன்படி ரூ. 4 லட்சத்தில் புதிதாக ஜெட்டி பாலம் அமைக்கப்படுகிறது. ஒருவர் மட்டும் இயக்கும் வகையில் ரூ.75ஆயிரத்திற்கும், 4பேர் செல்லும் வகையில் ரூ.1 லட்சம் வீதம் 10 பெடல் படகுகள் வந்துள்ளன.சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்கின்றனர்.

ஒருநபருக்கு கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. செவ்வாய் விடுமுறையாகும், சூழல் மேம்பாட்டு குழுவினர் மூலம் சுவையுடன் கூடிய மீன், நண்டு உணவு வகைகள், மகளிர் குழு மூலம் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்கள் விற்கபடுகிறது என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments