புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 10.05.2022 அன்று 85 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கீழ்காணும் 85 கிராம பஞ்சாயத்துகளில் 10.05.2022 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டையில் வடவாளம், 9ஏ நத்தம்பண்னை, கவிநாடு மேற்கு, முள்ளூர், கவிநாடு கிழக்கு, பெருங்களூரிலும், கந்தர்வகோட்டையில் கல்லாக்கோட்டை, துவார், குளத்தூர், சுந்தம்பட்டியிலும், திருவரங்குளத்தில் மாங்காடு, வடகாடு, வெண்ணாவல்குடி, எல்.என்.புரம், கொத்தமங்கலம், கல்லாலங்குடி, குலமங்களம் வடக்கு, குலமங்களம் தெற்கிலும், கறம்பக்குடியில் மாங்கோட்டை, முள்ளங்குறிச்சி, பிலாவிடுதி, மழையூர், கலபம், ஓடப்பவிடுதி, வாண்டான்விடுதியிலும், அறந்தாங்கியில் மறமடக்கி, திருநாளூர், பெருங்காடு, அரசர்குளம் கீழ்பாதி, குரும்பூர், நாகுடி, ஆவணத்தான்கோட்டை, ஆயிங்குடி, ஏகப்பெருமாளூரிலும், ஆவுடையார்கோவிலில் கரூர், வீரமங்களம், புத்தாம்பூர், சாத்தியகுடி, திருப்புவனவாசல், நாட்டானிபுரசகுடி, பெருநாவளூர், பொன்னமங்கலத்திலும், மணமேல்குடியில் வெட்டிவயல், கீழமஞ்சகுடி, காரக்கோட்டை, கோட்டைபட்டினத்திலும், திருமயத்தில் துளையானூர், ஆதனூர், லெம்பலக்குடி, மேலூர், அரசம்பட்டியிலும், அரிமளத்தில் தேக்காட்டூர், திருவாக்குடி, வாளரமாணிக்கம், கடியாபட்டி, கும்மங்குடியிலும், பொன்னமராவதியில் ஆலவயல், அரசமலை, மரவாமதுரை, வார்பட்டு, ஒலியமங்கலம், திருக்களாம்பூரிலும், அன்னவாசலில் எண்ணை, பரம்பூர், இராப்பூசல், திருவேங்கைவாசல், கிளிக்குடி, புல்வயல், விளாத்துப்பட்டி, இருந்திராபட்டிலும், விராலிமலையில் கத்தலூர், பூதக்குடி, கொடும்பாளூர், மண்டையூர், விரலூர், இராஜாளிபட்டி, இராஜகிரி, நம்பம்பட்டியிலும், குன்றாண்டார்கோவிலில் பள்ளத்துப்பட்டி, அண்டக்குளம், புலியூர், மேலபுதுவயல், டி.கீழையூர், தெம்மாவூரிலும் நடைபெறும்

இம்முகாமில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்க சான்றளிப்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் கைத்தறி, கைவினைப்பொருட்கள், நெசவு மற்றும் காதித்துறை ஆகிய துறைகள் பங்கேற்கவுள்ளன.

இம்முகாமில் பட்டா மாறுதல், சிறு/குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், கால்நடை முகாம், கிசான் கடன் அட்டை விண்ணப்பம் பெறுதல், ஏரி/குளங்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறுதல் ஆகியன மேற்கொள்ளப்படும் எனவும், விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments