தமிழகத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
எனினும், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கப்படும் என்றும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ல் தொடங்கும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் தொடங்கும் என்று கூறி உள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள்:
1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 13
12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 20
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 27
பொதுத்தேர்வு தேதிகள்:
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதி – மார்ச் 13, 2023-
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதி – மார்ச் 14, 2023
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் தேதி – ஏப்ரல் 3, 2023
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.