+2,+1,10th பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு! கோடை விடுமுறை குறித்தும் முக்கிய அறிவிப்பு






சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி இறுதி தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு முடிவுகள் மற்றும் கோடை விடுமுறை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

 12,11,10
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதலே, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.

வைரஸ் பாதிப்பு இந்தாண்டு தான் குறைந்துள்ள நிலையில், நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டது. மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், இதற்கான கால அட்டவணையைக் கடந்த மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி +2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

அதேபோல +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடைபெறும் நிலையில், 10ஆம் வகுப்புக்கு இன்று (மே 6) முதல் 30 வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். அதேபோல 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9.55 லட்சம் மாணவ மாணவியர் தேர்வில் பங்கேற்றனர்

இதனிடையே பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி முதல் 12 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என்றும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல +1 தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என்றும் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 17இல் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை இருக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் தொடங்க உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments