கோபாலப்பட்டிணத்தில் கத்திரி வெயில் கதகதப்புக்கு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் குளுகுளு மழை!

கோபாலப்பட்டிணத்தில் கத்திரி வெயில் கதகதப்புக்கு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன்  குளுகுளு மழை பெய்தது

தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் ஆரம்பித்த  நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி சில நாட்களில் வழக்கத்தைவிட அதிகம் சுட்டெரித்து வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு கத்தரி வெயில் நீடிக்க உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அதிகாலையில் 4 மணியளவில் திடிரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயிலால் வீட்டில் முடங்கிய மக்களுக்கு வெப்பச்சலனம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.அதேநேரத்தில் இடி சத்தமும், மின்னல் வெட்டும் பலமாக இருந்தது. மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தது.

கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் சற்று வெப்பம் தணிந்திருந்தது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments