மணமேல்குடி அருகே மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

மணமேல்குடி அருகே நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்று மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பொன்னகர் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் 4 மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நள்ளிரவில் கரை திரும்ப வேண்டிய நிலையில், அவர் கரை காரணத்தால் அவரை கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் சகா மீனவர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாயமான 4 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படகில் பழுது ஏற்பட்டதால், படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை உயிருடன் சக மீனவர்கள் மீட்டனர். அவர்கள் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments