புதுக்கோட்டை மாவட்ட கடலோர காவல் நிலைய ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு.! மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!


புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தளவாயாக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் புதிதாக G.O (Ms) No. 196-ன்படி ஒப்பளிக்கப்பட்ட 30 பணியிடங்களுக்கு, கடலோர பாதுகாப்பு காவல் நிலையங்களில் இணைந்து பணிபுரிய மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் மற்றும் திருப்புனவாசல் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்கண்ட தகுதியுடையவர்கள் கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் 24.05.2022-ம் தேதி தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது

தகுதிகள் :

1. பத்தாம் வகுப்பு (Pass or Fail)

2. வயது (20 முதல் 45 வரை )

3. உடற்தகுதிகள் - (காவல் துறையை போன்றது)

4.குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ, சாதி ரீதியிலான அமைப்புகளிலோ சம்மந்தப்பட்டவர்களாக இருக்க கூடாது.

மேற்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம். மாத ஊதியம் எதுவும் இல்லை. பணிநாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments