புதுக்கோட்டை மாவட்டத்தில் 494 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் பொதுமக்கள் ஆர்வமுடன் செலுத்தினர்புதுக்கோட்டை மாவட்டத்தில் 494 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர்.

தடுப்பூசி மெகா முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று வடமாநிலங்களில் சற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக மீண்டும் தடுப்பு நடவடிக்கைகள் கையாளப்படுகின்றன. பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோ னா தடுப்பூசி இதுவரை செலுத்தாதவர்கள், முதல் தவணை செலுத்தி, 2-வது தவணை செலுத்தாமல் இருப்பவர்களும், 2-வது தவணை செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்தாமல் இருப்பவர்களும் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நேற்று 494 இடங்களில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தினர்.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி

புதுக்கோட்டை நகரப்பகுதியில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதனால் முகாம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டம் இருந்ததை காண முடிந்தது. முகாம் நடைபெற்றதை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி பார்வையிட்டார். புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 4,274 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொன்னமராவதி வர்த்தக கழகம் மஹால் மற்றும் செம்பூதி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆதனக்கோட்டை

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாராப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 22 மையங்களில் நடைபெற்ற முகாம்களில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 980 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 852 பேருக்கும், 12 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு கார்பேவாக்ஸ் முதல் தவணை தடுப்பூசி 29 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 290 பேருக்கும் என மொத்தம் 2,151 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments