கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா மாநில தலைவர் பங்கேற்பு.
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது .

இன்று (07.05.2022) புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

மாநில தலைவர் அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து மரக்கன்று நட்டு பின்பு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தை மாவட்ட பொதுச்செயலாளர் S.A.M.அரபாத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மாவட்ட துணை தலைவர் P.M.S.குலாம் முகமது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

தொடர்ந்து மாபெரும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாவட்டத்தை சேர்ந்த பலர் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் முன்னிலையில் தங்களை SDPI கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து மாநில தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இவன்,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments