தொண்டியில் த.மு.மு.க., சார்பில் மதநல்லிணக்க பேதங்கள் இல்லா பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி.
த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா தலைமை வகித்தார். பாபநாசம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, எம்.பி. நவாஸ்கனி, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் குருக்கள் மணிகண்டன், தொண்டி துாய சிந்தாதிரை பாதிரியார் சவரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது.


நல்லாசிரியர் விருது பெற்ற உதயகுமார் பேசுகையில், ''திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர்கோயில் தேர்களின் சிலைகள் சேதமடைந்திருப்பதால் அவற்றை சீரமைக்க எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.எம்.பி., நவாஸ்கனி பேசுகையில், ''தேர்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments