ஆவுடையார்கோவில்-லில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் குளத்தை சுத்தம் செய்தனர்
ஆவுடையார்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திருப்பெருந்துறையில் நடைபெற்று வருகிறது. முகாமில் ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளத்தை நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர். குளத்தில் உள்ள கோரை புற்கள், கரையில் மண்டியுள்ள கருவேல முட்களை சுத்தம் செய்தனர். முன்னதாக தொடக்க விழாவில் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், தாசில்தார் அலுவலகத்தினர், போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் கண்ணையா நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments