கோட்டைப்பட்டிணம் சரகத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் சரகத்தில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. துணை தாசில்தார் முத்துகனி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி சொக்கயாராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பேரிடர் காலங்களில் மறைவிடங்களில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்பது மற்றும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதேபோல்ஆலங்குடியில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு மீட்பது குறித்து பயிற்சி ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆலங்குடி தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments