திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உப்பு ஏற்றுமதி

திருத்துறைப்பூண்டியில் இருந்து கோடியக்கரை வரை மீட்டர்கேஜ் ரெயில்பாதை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து வந்தது. இதில் பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து அகஸ்தியன்பள்ளி வரை ரெயில் இயக்கப்பட்டது.
அகஸ்தியன்பள்ளியில் இருந்து உப்பு பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும் சவுக்கு கட்டைகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பட்டு வந்தது. இதனால் ரெயில்வே துறைக்கு அதிக அளவில் வருவாய் கிடைத்தது.

அகல ரெயில் பாதை அமைக்கும் பணி

இந்த வழித்தடத்தில் இருந்த மீட்டர்கேஜ் பாதையை அகற்றி விட்டு அகல ரெயில்பாதை அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது வந்தது.
இந்த நிலையில் தற்போது அகல ரெயில்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக திருத்துறைப்பூண்டி-கரியாப்பட்டினம் வரை அகல ரெயில்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து, தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் கொட்டும் பணி நடக்கிறது.

ஜல்லி கற்கள் கொட்டப்படுகிறது

இதற்காக சரக்கு ரெயிலில் ஜல்லி கற்கள் ஏற்றி வைத்து தண்டவாளத்தில் கொட்டப்படுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வந்தால் வருகிற ஆகஸ்டு மாதத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments