அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து எரிந்தது

 
அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் ராஜ். இவர் அப்பகுதியில் திறந்த வெளியில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி அதனை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இந்த குவித்து வைத்து இருந்த பிளாஸ்டிக் பொருட்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்க்கு தீ பரவியது. இதனால் அறந்தாங்கி பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையறிந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அறந்தாங்கி டேவிதர் சாலையில் ரவி என்பவது வீட்டிற்கு பின்னால் இருந்த கோரை செடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments