தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: விண்ணப்பிக்க மே 18 கடைசி நாள் (நாளை)




தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க் கைக்கு இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலை யில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் மே 18 புதன்கிழமைக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

தமிழக அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத் தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து வகை சுயநிதி பள்ளிகளிலும், எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும்.

இந்த இடங்களில், ஏழை மாணவர்கள், கல்வி கட்டணமின்றி சேர்க்கப்படுவர். அவர்களுக்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இந்தத் திட்டத்தில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமின்றி அதே பள்ளியில் படிக்கலாம்.

இந்தநிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப். 20-ஆம் தேதி இணையவழி யில் தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் நாளை மே 18 புதன்கிழமையுடன் முடிவடையவுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 1.30 லட்சம் காலி யிடங்கள் உள்ளன. அவற்றுக்கு இதுவரை 1.12 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments