புதுக்கோட்டை அருகே சாலையோர விளக்குகள் எரியாததால் மின்கம்பங்களில் தீப்பந்தம் கட்டிய பொதுமக்கள்
புதுக்கோட்டை அருகே முள்ளூர் கிராமத்தில் சாலையோர தெரு விளக்குகள் கடந்த ஒரு மாத காலமாக எரியாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில் மின் கம்பங்களில் தீப்பந்தத்தை இரவில் கட்டி பொதுமக்கள் தொங்கவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களின் நூதன போராட்டம் என பதிவிடப்பட்டு வருகிறது. இதன்பிறகு அந்த மின் விளக்குகளை எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments