கட்டுமாவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!




கியான்வாபி மஸ்ஜிதை சீல் வைக்கும் வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்து புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கட்டுமாவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உ.பி. வாரணாசியில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில், தொழுகைக்காக இஸ்லாமியர்கள் ஒளு எனும் அங்கசுத்தி செய்யும் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக, மசூதியில் கள ஆய்வு செய்ய கோரி மனுத்தாக்கல் செய்த இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, வாரணாசி நீதிமன்றம்  கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் எனவும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக  (மே.17) செவ்வாய்க்கிழமை கட்டுமாவடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி வடக்கு தொகுதி தலைவர் M.முகமது அஜிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது, மாவட்ட பொருளாளரும் பொன்னமங்களம் ஊராட்சி மன்ற தலைவருமான M.முகமது இக்பால் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆவுடை சதாம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments