அறந்தாங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நாளை (19-05-2022) நடக்கிறது
அறந்தாங்கி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் தலைமை தாங்குகிறார். அறந்தாங்கி வருவாய் கோட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments