ஆவுடையார்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவர் கொலை வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI நிர்வாகிகள் , புதுக்கோட்டை மாவட்ட SP-யை சந்தித்து முறையீடு
ஆவுடையார்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவர் கொலை வழக்கு தொடர்பாக  புதுக்கோட்டை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI நிர்வாகிகள்  , புதுக்கோட்டை மாவட்ட SP-யை சந்தித்து முறையீடு:

கடந்த மாதம் 24-04-22 அன்று இரவு 11 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், ஆவுடையார்பட்டினம் கிராமத்தில் ரமலான் இரவுதொழுகை முடித்து விட்டு தனது வீட்டில் அமர்ந்திருந்த ஆவுடையார்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவர் நிஜாம் அவர்களை அடையாளம் தெரியாத 3 பேர்கொண்ட மர்மகும்பல் அவரது கை,கால்களை கட்டி, கழுத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்தது..

மேலும் அவரது மனைவி ஆயிசா பீவி என்பவரையும் கை, கால்களை கட்டி வைத்து கொலைமிரட்டல் விடுத்ததோடு மட்டுமல்லாமல் வீட்டிலிருந்த 250 பவுன் தங்கநகையையும், ₹28000 பணத்தையும்  கொள்ளையடித்து சென்றனர்...

கொலை நடந்த இடத்தை மத்திய மண்டல ஐஜி திரு.பாலசுப்பிரமணியம் மற்றும் புதுகை காவல்கண்காணிப்பாளர்(SP) நிஷா பார்த்திபன் அவர்களும் பார்வையிட்டிருந்தனர்....

இன்றோடு கொலை நடந்து 24 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யபடாதது அந்த பகுதி பொதுமக்களை பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று (17-05-2022) SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட  தலைவர் செய்யது அகமது, புதுகை பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், புதுகை மேற்கு மாவட்ட SDPI செயலாளர் வாசிம்,  அசார் உள்ளிட்டோர் புதுகை SP திருமதி.நிஷா பார்த்திபன் அவர்களை சந்தித்து மேற்கூறிய வழக்கின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தனர்..

"இந்த வழக்கு எங்களுக்கு விடப்பட்டிருக்கிற சவால் என்றும் , குற்றவாளிகள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும்,  SP, மற்றும் DIG இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் தினசரி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்கள்..
இவண்

சமூக ஊடகத்துறை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
புதுக்கோட்டை மாவட்டம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments