திருவாடானை அருகே அரசு பஸ் மோதியதில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் 2 பேர் படுகாயம்
அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு பஸ் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா சி.கே.மங்கலம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர், கார்த்திக் (வயது22). இவர் மோட்டார் சைக்கிளில், கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் நுங்கு மூடையை வைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். கருமொழி பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள் சேதமடைந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.

சிகிச்சை

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்ததுடன் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கார்த்திக்கின் தாயார் ஸ்ரீபிரியா, திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார், அரசு பஸ் டிரைவரான மண்டபத்தை சேர்ந்த பூவேஸ் பாண்டியன் (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments