மணமேல்குடி அருகே நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் உலக சுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மோகனசுந்தரம், யுவராஜா, ராஜ்குமார், குமார் ராஜா ஆகிய 4 பேரும் பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்திலிருந்து நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் சுமார் பத்து நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மீனவர்களும் மீன் பிடித்து விட்டு காலை 11 மணி அளவில் கரைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்கு திரும்ப வில்லை.

இதனால் அவரது உறவினர்கள் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனவர்கள் 4 பேரையும் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த படகில் சென்ற 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னகரம் கிராமத்தில் இருந்து நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 பேர் கரை திரும்பாததால் பொன்னகரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments