கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் உதவி இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி தகவல்
புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எம்.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாமல் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விவசாய கடன்களுக்கு மட்டுமே வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக அரசின் அறிவிப்பின்படி கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வட்டியில்லாமல் நடைமுறை மூலதன கடன்களாக வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களின் மூலம் கே.சி.சி. கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் ஏதேனும் பெறாதிருந்தால் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கும் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும், பயிர்க்கடனோடு சேர்த்து ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் வழங்கப்படும். இக்கடனுக்கான தொகையை கடன் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் செலுத்த வேண்டும். தவணை தேதிக்குள் கடனை திருப்பி ெசலுத்துபவர்களுக்கு வட்டி வசூலிக்கப்படுவதில்லை. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அருகிலிருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கால்நடை வளர்ப்பு மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு நடைமுறை மூலதனக்கடன் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments