அறந்தாங்கி கல்லணை கால்வாயின் கிளை வாய்க்காலை தூர்வார கோரிக்கை





புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனத்தார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்த போது கால்வாய்களை தூர்வார டெண்டர் விடப்பட்டு தூர்வாரும் பணி முழு அளவில் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு பெய்த மழையில் கல்லணை பாசன பகுதியான மேற்பனைக்காட்டில் இருந்து முப்பாலை வரையில் விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டது. தற்போது குறுைவ விவசாயத்திற்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தண்ணீர் வரும் வழித்தட வாய்க்கால் தூர்வாராமல் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆகையால் போர்க்கால அடிப்படையில் வாகனங்கள் மூலம் மேற்பனைக்காட்டில் இருந்து முப்பாலை வரையில் உள்ள தாய்வாய்க்கால்கள், கிளை வாய்க்காலான திருவம்பாடி, கலக்கமங்கலம், சிறுமருதூர் ஆகிய வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments