கோபாலப்பட்டிணத்தில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை


கோபாலப்பட்டிணத்தில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை பெய்தது

தமிழ்நாடு புதுவையில் அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வெப்பச்சலனம் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை 3.30 மணிக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது . திடீர் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கோடை வெயில் உக்கிரம் குறைந்து சிறிது குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments